வெந்து தணிந்தது காடு.. வெள்ளத்தில் மிதந்தது வீடு தவிச்சி நிக்குது தமிழ் நாடு..! சொல்றது யாரு... நம்ம டி.ஆரு..!

0 1193

மழை காலத்தில் அரசு மட்டும் முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் போதாது, புதிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்றும் மக்களுக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் எனவும் கொருக்குப் பேட்டையில் நிவாரண உதவிகள் வழங்கிய டி. ராஜேந்தர் தெரிவித்தார்

சென்னை கொருக்குப்பேட்டையில் எஸ்.டி.ஆர். ரசிகர் மன்றம் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நடிகர் டி. ராஜேந்தர் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், தன்னையும், தன் மகனையும் வாழ வைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி கடன் பண்ணிருப்பதாக கூறினார். இவ்வளவு
பெரிய மழை வந்து எல்லோரும் கஷ்டப்பட்டால் மக்கள் குறையை தீர்க்க சொல்லி ஒன்று படைத்த இறைவனிடம் கேட்கலாம், அல்லது ஆட்சியாளர்களிடம் கேட்கலாம் என்று தெரிவித்த அவர், தான் யாரையும் திட்டுவதற்காக வரவில்லை, கோரிக்கை வைப்பதாக கூறினார்.

இத்தனை காலங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்தது என்றும் இவ்வளவு பெரிய மழையை இப்போது தான் பார்ப்பதாகவும் தெரிவித்த அவர், வெந்து தணிந்தது காடு, வெள்ளத்தால் மிதந்தது பல வீடு, விழி பிதுங்கி நின்றது தமிழ்நாடு என்று கூறினார். 1980-இல் ஒரு தலை ராகம் எடுக்க தாம் வந்த போது அன்றைக்கு இருந்த சென்னை வேறு என்றும் இப்போது இருக்கும் சென்னை வேறு என்றும் குறிப்பிட்ட அவர், வருடா வருடம் மழை பொழியும் போது வெள்ளம் எங்கே போகும்? அதற்கு இடம் எங்கே இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

சென்னையில் 200 ஏரி இருந்த நிலையில் இப்போது அதெல்லாம் ஏங்கே என்றும் ஏரி, குளம் இல்லாமல் மழை தண்ணீர் எப்படி போகும் என்றும் வினவிய அவர், புதிய ஏரி உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையாக வைப்பதாகவும் தெரிவித்தார். மழை காலத்தில் அரசு மட்டும் முன்னெடுச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால் போதாது என்றும் மக்களும் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டி.ஆர் கேட்டுக் கொண்டார்.

இது தன் குருநாதர் கருணாநிதி கொடுத்த டிரெய்னிங் என்று தெரிவித்த டி.ஆர்., ரேஷன் கடைகளில் மெழுகுவர்த்தி, குடை, டார்ச் லைட் கொடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments