நாடாளுமன்றத்தில் புகை குண்டுகளை வீசியவருக்கு பரிந்துரை கடிதம்.. சபாநாயகரை சந்தித்து பாஜக எம்.பி தன்னிலை விளக்கம்

0 1270

நாடாளுமன்றத்தில் புகை குண்டுகளை வீசியவர்களுக்கு பரிந்துரை கடிதம் அளித்த பாஜக எம்.பி பிரதாப் சின்ஹா மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து விளக்கம் அளித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாகர் சர்மாவின் தந்தை, தான் தேர்ந்தெடுக்கப்பட்ட மைசூரு தொகுதியில் வசிப்பவர் என்றும் தமது மகனுக்கு நாடாளுமன்ற நிகழ்ச்சியைக் காண அனுமதி கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.

சாகர் சர்மாவும் மனோரஞ்சன் என்ற மற்றொருவரும் நாடாளுமன்றத்தில் கலர் குண்டுகளை வீசியதால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத்தவிர தமக்கு வேறு எந்த விவரமும் தெரியாது என்று பாஜக எம்பி விளக்கம் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments