பெண் பொறியாளர் கொலை! கூண்டோடு கம்பி எண்ண போகும் மாமியார் குடும்பம்..!! பச்சிளம் குழந்தை முன் கொடூரம்

0 1404

கோபிசெட்டி பாளையம் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் சாப்ட்வெர் என்ஜினீயரை கழுத்தை நெறித்து கொடூரமாக கொலை செய்து விட்டு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது இறந்து விட்டதாக நாடகமாடியதாக கணவன் குடும்பத்தாரை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

கோபிசெட்டிப்பாளையம் அருகே பூமாண்ட கவுண்டனூரை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகள் பூரணி. இவர் பொறியியல் கல்லூரியில் படித்த போது, சின்னியம்பாளையத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் மகன் மதன் குமார் என்பவரை காதலித்துள்ளார். ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், பொருளாதார அந்தஸ்த்து காரணமாக இவர்களது காதலை பூரணியின் பெற்றோர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. எனினும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலன் மதன்குமாரை பூரணி திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் உள்ள நிறுவனங்களில் இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணிபுரிந்து வந்தனர். கருவுற்றதும் சின்னியம்பாளையத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துவிட்ட பூரணிக்கு 5 மாதங்களுக்கு முன் கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

கடந்த அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த போது பூரணி திடீரென மயங்கி விழுந்ததாக கூறி கவுந்தப்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பூரணியை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பரிசோதித்த மருத்துவர்கள், பூரணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதைத்தொடர்ந்து பூரணியின் சடலம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. உடற்கூராய்வு அறிக்கையில், பூரணி தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத் திணறி இறக்கவில்லை என்பதும், கழுத்து நெறிக்கப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்ததால் பூரணியின் உறவினர்கள் ஆவேசம் அடைந்தனர்

மர்ம மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு பூரணி கணவன் மதன்குமார், மாமியார் பூங்கொடி மாமனார் யுவராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கவுந்தபாடி போலீசார் தேடி வந்தனர். ஒத்தகுதிரை என்ற ஊரில் உறவினர்கள் வீட்டில் பழங்கி இருந்த மதன்குமாரின் குடும்பத்தை கைது செய்து விசாரித்த, சொத்துக்காக நடந்த கொடூர சம்பவம் அம்பலமானது.

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த பூரணி தமது பெற்றோரிடம்,சொத்தில் பங்கு எதுவும் வேண்டாம் எனக்கூறிவிட்டதாக தெரிகிறது. பூரணிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்து, மகளையும், பேத்தியையும் பார்க்க பூரணியின் பெற்றோர் சென்ற போது சொத்து விவகாரத்தை சுட்டிக்காட்டி அவர்களை மதன்குமாரும், அவரது குடும்பத்தினரும் தடுத்து நிறுத்தி சண்டையிட்டு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. பலமுறை சொத்தை பிரித்து வாங்கி வருமாறு மனைவி பூரணியிடம், மதன் குமாரும், அவரது குடும்பத்தினரும் வற்புறுத்தியபோதும் அதை பூரணி ஏற்க மறுத்ததாகவும் தெரிகிறது.

பூரணியின் பெற்றோரிடம் இருந்து சொத்து கிடைக்காது என முடிவு செய்த மதன்குமார் சம்பவத்தன்று, பூரணியை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு, தாய்ப்பால் கொடுத்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக நாடகமாடியதாக தெரிவித்த போலீசார், கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவரது உறவினர்கள் 2 பேரையும் கைது செய்தனர். மூவரையும் கோபி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக நடந்த கொடூர கொலையால் பச்சிளம் குழந்தை தாயை இழந்து பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments