சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு

0 515

சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மத்தியக் குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம், சமத்துவப் பெரியார் நகர், வரதராஜபுரம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த அவர்கள், மழை வெள்ளத்தால் சேதமடைந்த டீவி, பிரிட்ஜ் போன்ற உடைமைகளையும் பார்வையிட்டனர்.

பாதிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஆய்வு செய்தனர். பின்னர் பேட்டியளித்த மத்தியக் குழுவின் தலைவர் குணால் சத்யார்த்தி, மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியது போன்ற பாதிப்புகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுப்பதற்கு தொலைநோக்குத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments