2024 ஜனவரி முதல் விசா இல்லாமல் கென்யாவில் பயணிக்க அனுமதி... கென்யா பொருளாதார வளர்ச்சி அடைய - அதிபர் நடவடிக்கை

0 694

ஆப்பிரிக்க நாடுகளின் ஒன்றான கென்யாவில், விசா கட்டுப்பாடுகள் இல்லாமல், வரும் ஜனவரி மாதம் முதல் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் பயணிக்கலாம் என்று  அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ தெரிவித்தார்.

விசா கட்டுப்பாடுகளால் சமூக மேம்பாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை கென்யா இழப்பதாக தெரிவித்த அவர், கென்யாவில் பயணம் செய்வோர் தொடர்பாக டிஜிட்டல் தளம் தொடங்கப்பட்டு அதில் விவரம் பதிவு செய்யப்படும் என்றார்.

மேலும் வெளிநாட்டினருக்கு மின்னணு பயண அங்கீகார சான்று வழங்கப்படும் என்றும் அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார்.

ஏற்கனவே எல்லையற்ற ஆப்பிரிக்காவுக்கும் வில்லியம் ரூட்டோ குரல் கொடுத்து வருகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments