சபரிமலையில் அதிகரித்துள்ள கூட்டத்தினால் 14 மணி நேரம் வரையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

0 1046

சபரிமலையில் அதிகரித்துள்ள பக்தர்கள் கூட்டத்தினால் தரிசனத்திற்கு 14 மணி நேரம் வரையில் காத்திருக்க வேண்டியிருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு ஊர்களிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும் நிலக்கல் பகுதியில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து கேரள அரசுப் பேருந்தில் பம்பாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.

இந்த பேருந்துகள் 5 மணி நேரத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுவதாக குற்றச்சாட்டியுள்ள பக்தர்கள், போதுமான அடிப்படை வசதிகள் பம்பா மற்றும் நிலக்கல் பகுதியில் செய்து கொடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.

பேருந்துகளை இயக்க தாங்கள் தயாராக இருந்தாலும் போலீஸார் உரிய அனுமதி வழங்குவதில்லை என போக்குவரத்து ஊழியர்கள் தெரிவித்தனர்.

பேருந்து கூட்ட நெரிசலில் தந்தையை தொலைத்த சிறுவன் ஒருவன் தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு கைகூப்பி போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments