எது வேணா தூவிருவீங்களா..? முனிசிபல் ஆபீஸர்ஸ்..! பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதாவா..?

0 2859

தெருக்களில் தேங்கி இருந்த மழைநீர் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றி கிருமி நாசினி பவுடருக்கு பதில் மூட்டை மூட்டையாக மைதா மாவை தூவிச்சென்றதாக செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் மீது புகார் எழுந்தது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் நாரவாரி குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் மழை நீர் வடிந்து உள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள தெருக்களில் குப்பை கழிவுகளை அகற்றி கிருமி நாசினி பவுடர் தூவும் பணியை தூய்மை பணியாளர்கள் செய்தனர்.

இதனால் கொசு தொல்லை குறைந்து பூரான் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் அச்சுறுத்தல் இருக்காது என மக்கள் நிம்மதி அடைந்த நிலையில் செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெரு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் துவக்கப்பட்ட பவுடரில் இருந்து மைதா வாசனை வீசியதாக மக்களில் சிலர் தெரிவித்தனர்.

கையில் எடுத்து பார்த்தபோது பவுடர் மென்மையாக இருந்ததாகவும், தூய்மை பணியாளர்கள் கொண்டு வந்த மூட்டையில் உள்ள பவுடரை சுவைத்துப் பார்த்த போது அதில் பேக்கரிகளில் பிஸ்கட், ரொட்டி தயாரிக்க பயன்படும் மைதா மாவு இருந்தது தெரியவந்ததாகவும் சிலர் கூறினர். இதை கேட்ட அப்பகுதி மக்கள் மழை பாதித்த பகுதிகளில் தெளிக்க ப்ளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மூட்டையை கொடுத்து அனுப்பிய பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர், பிளீச்சிங் பவுடர் உடன் சுண்ணாம்பு கலந்து வீதியில் தூவ அந்த மூட்டையை கொடுத்தனுப்பியதாகவும், தங்களுக்கு சுன்னாம்பு சப்ளை செய்த ஸ்ரீ விநாயகா ஏஜென்ஸி என்ற ஒப்பந்ததாரர் மைதா கவரில் சுண்ணாம்பு கலந்து அனுப்பியதால் அதனை மைதா என்று மக்கள் தவறாக நினைத்து விட்டதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments