நிதி நெருக்கடி நிலையிலும் அரசு நிவாரணம் வழங்குகிறது: பொன்முடி
நிதி நெருக்கடி உள்ள நிலையிலும் தமிழக அரசு பல்வேறு வெள்ள நிவாரண பணிகளை செய்து வருவதாக அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை பல்லாவரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
6 ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக கொடுக்கவில்லை, பாதிக்கப்பட்ட விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், மோட்டார் சைக்கிள் இழந்தவர்களுக்கும் முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார் என பொன்முடி தெரிவித்தார்.
Comments