கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 350க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளி கைது
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் 350க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளி விஜயை கைது செய்ததாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் தெரிவித்தார்.
நவம்பர் 27 ஆம் தேதி சுமார் 5 புள்ளி 15 கிலோ நகை கொள்ளை நடைபெற்ற நிலையில் 24 மணி நேரத்திலேயே குற்றவாளி யார் என்பதை அடையாளம் கண்டுவிட்டதாக தெரிவித்த சந்தீஷ், ஆதார் அட்டையே எடுக்காத விஜய் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆதார் இல்லாமல் சிம் வாங்க முயற்சித்ததால் சிக்கிக் கொண்டதாக தெரிவித்தார்.
ஜூவல்லரியில் பணம் இல்லாததால், சேப்டி லாக்கரில் வைக்காமல் அலமாரியில் வைத்திருந்த நகைகளை விஜய் கொள்ளையடித்ததாக தெரிவித்த துணை ஆணையர் சந்தீஷ், மொத்தமாக 5 புள்ளி 12 கிலோ நகையை மீட்டதாக தெரிவித்தார்.
நகைக்கடைகள், செல்போன் விற்பனை கடைகள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட அலராம், சி.சி.டி.விகளை பயன்படுத்த வேண்டுமெனவும் துணை ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
Comments