குழந்தை சடலத்தை அட்டைப்பெட்டியில் வைத்து வழங்கியது குறித்து... 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையை அட்டைப் பெட்டியில் வைத்து ஒப்படைத்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோவில் சென்று நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வை சைதாப்பேட்டையில் துவக்கிவைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த சோபியாவிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத் துறையின் தவறு எதுவும் இல்லை, குழந்தையின் தந்தை வேண்டுகோளுக்கிணங்கவே உடற்கூராய்வு செய்யாமல் சடலம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
Comments