எண்ணூர் பகுதியில் வெள்ளத்தில் எண்ணெய் கழிவு கலந்ததிற்கு சி.பி.சி.எல். காரணம்: மாசு கட்டுப்பாடு வாரியம்
சென்னை எண்ணூர் கழிமுக பகுதியில் எண்ணெய் கழிவு தேங்கியதற்கு சி.பி.சி.எல். நிறுவனமே காரணம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை சார்பில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு எண்ணூர் பகுதியில் ஆய்வு செய்தது. சி.பி.சி.எல். வளாகத்தில் இருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் கழிமுகப்பகுதியை எண்ணெய் கழிவுகள் சென்றடைந்ததை கண்டறிந்த அக்குழு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்நிலையில், எண்ணூர் கழிமுக பகுதியில் மீட்புப் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள சி.பி.சி.எல். நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
விதிகளை மீறி சி.பி.சி.எல். நிறுவனம் எண்ணெய் கழிவுகளை வெளியேற்றியது கண்டறியப்பட்டால் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Comments