மத்தியப் பிரதேச முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் மோகன் யாதவ்
மத்தியப் பிரதேச முதலமைச்சராக மோகன் யாதவ் நாளை பதவியேற்க உள்ளார். சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட அவர், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
58 வயதான மோகன் யாதவ் தாம் முதலமைச்சராவோம் என்று கனவில் கூடநினைத்ததில்லை என்று செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார். கடுமையான உழைப்பால் இந்த முன்னேற்றம் அவருக்குக் கிடைத்ததாக, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சிவராஜ்சிவ் சவுகான் தெரிவித்துள்ளார்.
Comments