"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கேரளாவில் ஆளுநரின் காரை முற்றுகையிட முயன்ற மாணவர் அமைப்பினர்... தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டு
கேரளாவில் ஆளுநரின் காரை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட முயன்றதால், தனக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என ஆளுநர் ஆரிப் முகமது கான் குற்றம் சாட்டி உள்ளார்.
கேரளாவில் உள்ள பல்கலைக்கழங்களில் குறிப்பிட்ட அமைப்பினருக்கு ஆளுநர் ஆதரவாக செயல்படுவதாகக் கூறி திருவனந்தபுரத்தில் அவரது காரை எஸ்எப்ஐ அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர்.
இதனால் கடும் கோபம் கொண்ட ஆரிப் முகமது கான் காரை விட்டு இறங்கி, மேலும் கேரளாவில் குண்டர்களின் சாம்ராஜ்யம் நடப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் தன்னை உடல் ரீதியாக காயப்படுத்த கேரள முதல்வர் சதி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Comments