ஓசூரில், அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவற விட்ட மூன்றரை லட்ச ரூபாயை, ஓட்டுநரும், நடத்துநரும் மீட்டு அந்த பயணியிடமே ஒப்படைப்பு

0 1040

ஓசூரில், அரசுப்பேருந்தில் பயணி ஒருவர் தவற விட்ட மூன்றரை லட்ச ரூபாயை, ஓட்டுநரும், நடத்துநரும் மீட்டு அந்த பயணியிடமே ஒப்படைத்தனர்.

புருஷோத்தமன் என்பவர், தனது நிறுவனத்தில் கொடுத்து அனுப்பிய  மூன்றரை லட்ச ரூபாய் பணப்பையை இருக்கைக்கு மேல் உள்ள செல்ஃபில் வைத்து விட்டு, பின் எடுக்காமல் இறங்கிவிட்டார்.

அனைத்து பயணிகளும் இறங்கியதும் பையை கவனித்த ஓட்டுநர் தவமணி, உள்ளே கட்டு கட்டாக பணம் இருந்ததை பார்த்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். பணப்பையைத் தேடி டிப்போ வந்த புருசோத்தமனிடம் ஓட்டுநர் தவமணி பணப்பையை ஒப்படைத்தார். அவருக்கு புருஷோத்தமன் மனமார நன்றி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments