பெரிய மருத்துவமனைகளில் நோயாளிகளை நோட்டமிட்டு திருட்டு - 2017 ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்தவர் கைது
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை மட்டும் குறி வைத்து திருடி வந்த ஸ்கேனிங் கருவி விற்பனை பிரதிநிதியை சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்பாக்கம் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மேற்கு வங்க பெண் ஒருவரின் 32 கிராம் மதிப்புள்ள தங்க, வைர மோதிரங்கள் திருடு போனதாக அண்மையில் வந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
தங்களுக்குக் கிடைத்த துப்புகளின் அடிப்படையில், பட்டாபிராமில் தங்கியிருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற ஸ்கேன் விற்பனை பிரதிநிதியை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில், ஸ்கேன் கருவியை விற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளுக்கு செல்லும் போது அங்கு சிகிச்சையில் உள்ளவர்களை குறி வைத்து திருட்டில் ஈடுபட்டதை சந்தோஷ் ஒப்புக் கொண்டதாக தெரிவித்த போலீசார், 2017ம் ஆண்டு முதல் தாங்கள் தேடி வந்த அந்நபரை தற்போது கைது செய்துள்ளதாகவும் கூறினர்.
Comments