எகிப்து நாட்டின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது... அதிபர் அப்தெல்-ஃபாதா அல்-சிசி உள்பட நான்கு பேர் போட்டி

0 964

எகிப்து நாட்டில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருத்து வாக்களித்து வருகின்றனர். தற்போதைய அதிபர் அப்தெல்-ஃபதா அல்-சிசி உள்ளிட்ட நான்கு பேர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவுக்காக நாடு முழுவதும் 9,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை வரை நடைபெறும் வாக்குப்பதிவில் 6 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் அப்தெல்-ஃபதா அல்-சிசியுடன்,  லிபரல் வாஃபட் கட்சியின் அப்தெல் சனத் யமாமா, குடியரசுக் கட்சித் தலைவர் ஹசெம் ஓமர், எகிப்திய சமூக ஜனநாயகக் கட்சியின் ஃபரித் சஹ்ரான் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments