ஐ.நா., வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாடு எடுத்த ரஷ்ய அதிபர் புடினிடம் அதிருப்தி தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு
காஸா போர் தொடர்பான ஐ.நா. வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைபாடு எடுத்தமைக்காக, ரஷ்ய அதிபர் புடினிடம், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு தொலைபேசி வாயிலாக அதிருப்தி தெரிவித்தார்.
காஸாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தும் ஐ.நா. தீர்மானத்துக்கு ரஷ்ய பிரதிநிதிகள் அதரவு அளித்திருந்த நிலையில், தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா அந்த தீர்மானத்தை ரத்து செய்தது.
இதுதொடர்பாக புடினிடம் அதிருப்தியை வெளிப்படுத்திய நேதன்யாஹூ, இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்குமாறு ஹெஸ்பொல்லா போராளிகளுக்கு உத்தரவிட்ட ஈரான் அரசுடன் ரஷ்யா இணைந்து செயல்பட்டுவருவதற்கும் கண்டனம் தெரிவித்தார்.
Comments