விமானத்தின் கழிவறையில் விதிகளைமீறி இறால் சமைத்த யு டியூபர்

0 2815
விமானத்தின் கழிவறையில் விதிகளைமீறி இறால் சமைத்த யு டியூபர்

விமானம் ஒன்றின் கழிவறையில் உள்ள வாஷ் பேசினை பாத்திரமாக்கி, இறால் சமைத்த யு டியூபரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

டிக்டாக் செயலி வழியே "பாத் ரூம் சமையல்காரர்" என்ற தலைப்பில் வீடியோ வெளியானது. அதில், விமான நிலையத்தில் நுழைந்து, விமானத்தின் இருக்கையில் அமரும் நபர், தனது கையில் வைத்திருந்த பையுடன் கழிவறையில் நுழைகிறார்.

பின்னர், பையில் இருந்த பேட்டரி மூலம் வாஷ் பேஷனில் நிரப்பிய தண்ணீரை கொதிக்க வைக்கிறார். பின்னர் இறால், பூண்டு, மசாலாவை போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி பேப்பர் பையில் வைத்து சாப்பிடுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனாலும், அந்த யு டியூபரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments