வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டோம்..... அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
நாட்டின் வடக்கு எல்லையில் சீனாவால் விடப்பட்ட சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற ஃபிக்கி மாநாட்டில் உரையாற்றிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் வடக்கில் எழும் சவால்கள் எதிர்கொள்வதற்காக கூடுதல் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிராக உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது குறித்தும் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் இருந்த போதிலும் , இந்தியாவின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதாக கூறினார்.
உலகம் இந்தியாவை மிகவும் வலுவான வளர்ச்சி பகுதியாக பார்ப்பதாக ஜெய்சங்கர் மேலும் தெரிவித்தார்.
Comments