வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

0 1972

வெள்ளத்தால் கடந்த 6 நாட்களாக சூழப்பட்டுள்ள பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகர் மக்களின் தவிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. தங்களது பாடப்புத்தகங்கள், சான்றிதழ்களை வெள்ளத்திடம் பறிகொடுத்துவிட்டதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள ஷோரூம் சர்வீஸ் சென்டரில் வரிசை கட்டி நிற்கிறது வெள்ளத்தில் மூழ்கிய புல்லட் பைக்குகள்...

தங்களது பைக்குகளை சீர் செய்வதற்காக பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இன்சூரன்ஸை நம்பியே இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கரணை சாய்பாலாஜி நகரில் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி, வரும் திங்களன்று தேர்வு தொடங்கும் நிலையில், வெள்ளத்தில் தன்னுடைய பாடப்புத்தகங்களை இழந்து தவிப்பதாக கூறுகிறார்.

2015-ல் வெள்ளம் வருவதற்கு முன்பு எச்சரித்தது போல், இந்த முறை தங்களுக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்பதால், உழைப்பில் சேர்த்த அனைத்து வீணாகிவிட்டதாக கதறுகிறார் விஜயலட்சுமி.

பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகரில் குடியியேறிய புதுமணத்தம்பதிகளின் சீர் வரிசை அனைத்து வெள்ளத்தில் மூழ்கி வீணாக போனதாக கூறுகிறார் கோபால்.

வெள்ளம் ஓரளவுக்கு வடிந்தாலும், உடமை இழப்பால் தொடர்ந்து அவதிப்படுவதாக கூறும் இப்பகுதிவாசிகள், அரசு வழங்கும் நிவாரணத்தொகை உதவியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments