கணக்கிடும் பணி முடிந்த பிறகு மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்கும் - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

0 1243

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4 நாட்களுக்கு மேலாகியும் வெள்ளம் வடியாததற்கான காரணம் குறித்து தமிழக அரசு உரிய ஆய்வு நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வலியுறுத்தினார்.

சென்னையில் பேட்டியளித்த அவர், வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள கட்டிடங்களின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தமிழக அரசு கேட்டுக் கொண்டால், இவற்றுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார். பாதிப்புகளை கணக்கிடும் பணி முடிந்த பிறகு மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். வரதராஜபுரம், முடிச்சூர் வழியாக செல்லும் அடையாறு ஆற்று கால்வாயை பார்வையிட்ட மத்திய அமைச்சர், மழை பாதிப்புகள் தொடர்பான புகைப்பட விவரங்களை செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத்திடம் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments