ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்று கூறியது பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது - இ.பி.எஸ்
கனமழை பெய்தால் சென்னை மாநகரில் ஒரு சொட்டு நீர் கூட தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியாளர்கள் கூறியது பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை துறைமுகம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் வடிகால் திட்டங்களை முறையாக செயல்படுத்தி இருந்தால் இப்படிப்பட்ட நிலை வந்திருக்காது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை வெள்ள பாதிப்பு தடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
Comments