ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவின் வீட்டில் இருந்து ரூ 220 கோடி ரொக்கப்பணம் பறிமுதல்
ஒடிசாவில் உள்ள ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகுவின் வீட்டில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 220 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
புதன்கிழமை தொடங்கி இன்று வரை ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை 220 கோடி ரூபாய் எண்ணப்பட்ட நிலையில், மீதமுள்ள கரன்சி நோட்டுகளை எண்ணுவதற்காக கூடுதலாக எந்திரங்களை அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இச்செய்தியை தமது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி மக்களிடம் இருந்து ஊழல் மூலமாக கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மக்களிடமே திருப்பித் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர்கள் நேர்மையைப் பற்றிய பேச்சுகளைக் கேட்பதற்கு முன் மக்கள் கட்டுக்கட்டாக அடுக்கிவைத்திருக்கும் பணத்தைப்பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Comments