தெலுங்கானாவில் இன்று முதல் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்க உத்தரவு

0 1356

தெலுங்கானாவில் இன்று முதல் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு பேருந்தில் இலவசமாக பயணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா முதலமைச்சராக பதவியேற்ற ரேவந்த் ரெட்டி தமது ஆறு தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதன்படி தெலுங்கானா மாநில சாலைப் போக்குவரத்துக்குட்பட்ட பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஜீரோ டிக்கெட் தரப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments