இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்

0 2512

பள்ளிக்கரணை சாய் பாலாஜி நகர் முழுவதும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில் , அங்கு குழந்தை பெற்ற மருமகளை, படகில் சென்று தங்கள் வீட்டிற்கு வருமாறு மாமியார் அழைத்தும், அவர் வரமறுத்து அடம்பிடித்ததால் உண்டான வாக்குவாதத்தில் இரு தரப்பினரும் தாக்கிக் கொள்ள முயன்றதால் படகோட்டி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

பள்ளிக்கரனை சாய் பாலாஜி நகரில் வீட்டை சுத்தி வெள்ளம்... குழந்தை பிறந்து 3 வாரம் தான் ஆகுது.. தாய் வீட்டில் இருக்கும் மருமகளை வேளச்சேரியில் வெள்ளம் வடிந்த தங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்த மாமியார் குடும்பத்தை அடிக்க பாயும் மருமகள் குடும்பத்தினர் இவர்கள் தான்..!

பிரசவத்துக்கு முன்னரே இரு தரப்புக்கும் பிரச்சனை இருந்து வந்த நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்ற மருமகளை அரசின் மீட்பு படகில் சென்று மாமியார் குடும்பத்தினர் அழைத்தனர்

மருமகள் மாமியாரை வீட்டுக்குள் அழைக்க ...மாமியாரோ படகில் இருந்த படியே புறப்பட்டு வாம்மா... என்று கெஞ்சாத குறையாக அழைத்தார்

மருமகளின் தந்தையார் , அனுப்ப முடியாது என்று கெத்துக்காட்ட, வருவியா மாட்டியா என்று நாத்தனார் திருப்பி பிடிக்க ஆரம்ப மானது அதகளம்

இதனை கண்டு மீட்பு பணிக்கு செல்லவேண்டிய படகோட்டியோ, யம்மா கொஞ்சம் இறங்குங்க .. 10 நிமிடத்தில் திரும்பி வருகிறேன்என்று சொல்ல அவர்கள் படகில் நின்றபடியே வாக்குவாதம் செய்தனர்

மாமியார் படகை விட்டு இறங்கி சென்று அழைக்க மருமகள் செல்ல மறுத்து அடம்பிடிக்க , சம்பந்தி வந்து பேச ஆரம்பித்ததும் வார்த்தைகள் தடித்தது, வருவியா வரமாட்டியா என்று கெடு விதிக்க, மீண்டும் நாத்தனார், இந்த பொண்ணே வேணாண்டா என்று தனது சகோதரனி அழைக்க தகராறு உச்ச கட்டத்தை எட்டியது

பெண் வீட்டார் அடிக்க பாய்ந்த நிலையில் நிலைமையை உணர்ந்த படகோட்டி படகை எடுத்துக் கொண்டு கிளம்பியதால் அடிதடி நிகழாமல் தடுக்கப்பட்டது.

இரு குடும்பத்துக்கும் இடையே ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், மழை வெள்ளம் சூழ்ந்த நிலையிலும் பச்சிளம் குழந்தையுடன் மருமகள் பிடிவாதத்துடன் இருக்கிறார் என்றால் அதற்கு முன்பு மாமியார் வீட்டில் அவர் என்ன பாடு பட்டாரோ ? என்று எண்ண தோன்றினாலும், தனது குழந்தையை மனைவியுடன் வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்து ஏமாற்றத்துடன் சென்ற அந்த இளம் தந்தையின் முகத்தில் தீராத ஏக்கம் தென்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments