தல நீ தாலி கட்டு.. பொண்ணு ஓடி போகாம நாங்க பாத்துக்கறோம்..! தாலியுடன் தவித்த மணமகன்

0 30358

திருமண வரவேற்பில் ஜோடியாக போஸ் கொடுத்த மணமகள் தாலி கட்டும் நேரத்தில் மணமகனை தாலி கட்ட விடாமல் திருமணத்தை தடுத்து நிறுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

மேல் படிப்பு படிக்கணும்... எனக்கு இப்ப திருமணம் வேண்டாம்.. என்று தாலி கட்ட விடாமல் மணமகள் திருமணத்தை தடுத்து நிறுத்திய காட்சிகள் தான் இவை

கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம், சிக்கப்யலாடகெரே கிராமத்தை சேர்ந்த சந்தோஷ்சுக்கும் திப்பரட்டிஹள்ளியை சேர்ந்த யமுனா வுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு 6- ம் தேதி மாலை மணமக்கள் வரவேற்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது

மறு நாள் திருமணத்தன்று காலை , மணமகள் கழுத்தில் மணமகன் தாலியை கட்டுவதற்கு முற்படும்பொழுது, திடீரென மணமகள் தனது வலது கையால் தாலியை தட்டி விட்டு திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகனிடம் , மணமகளின் உறவினர் ஒருவர் தாலி கட்டுங்க பார்த்துக்கலாம் என்று நம்பிக்கை சொன்னார்

தாலி கட்ட விடாமல் தடுத்ததால், மணமகளிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை வழங்கி சமாதானம் செய்ய முயன்றும், தான் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பதால் திருமணம் செய்து கொள்ள முடியாது என திட்டவட்டமாக திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

இதனால் அவர்களுக்கு நடக்க விருந்த திருமணம் வரவேற்போடு முடிந்து விட்டது. மணமகளை கட்டாயப்படுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததால் திருமணம் நின்று போனதாகவும், மணமகன் வீட்டார் ஆதங்கத்துடன் புறப்பட்டுச்சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments