அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தயார்..!
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தலைமை வசிக்க சத்ரபதி சிவாஜியின் பட்டாபிஷேகத்துக்கு தலைமை வகித்த காக பட்டரின் வம்சத்தில் வந்த பண்டிதர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராமர் கோயிலில் குழந்தை ராமரின் சிலையை பிரதமர் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்வதற்கு முன், கோயில் கும்பாபிஷேகத்துக்குரிய பூஜைகள் ஜனவரி 16-ஆம் தேதி அன்றே துவங்க உள்ளன. சர்வ பிரயஸ்சித் ஹோமம், ஜல யாத்திரை, கலச பூஜை போன்றவற்றை வாரணாசியை சேர்ந்த பண்டிதர் லக்ஷ்மிகாந்த் மதுரநாத் தீக்ஷிதர் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வேத விற்பண்ணர்கள் 121 பேர் நடத்தி வைப்பார்கள் என்று ராமஜன்ம பூமி அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
நிகழ்ச்சியின் உச்சகட்டமாக, நாட்டின் பல்வேறு புனிதத் தலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட 114 கலசங்களில் உள்ள புனித நீர் மூலம் குழந்தை ராமர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும். மறுபுறம், கர்ப்ப கிரகத்தில் நிர்மாணிக்கப்பட இருக்கும் குழந்தை ராமர் சிலை இன்னும் ஒரே வாரத்தில் தயாராகிவிடும் என்றும், ஆலயத்தின் மூல ஸ்தானமும் ஏறத்தாழ தயாராக இருப்பதாகவும் அறக்கட்டளையினர் கூறியுள்ளனர்.
Comments