கேரளாவில் பெண் மருத்துவர் ஷஹானா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலரும் சக மருத்துவருமான ரூவைஸ் கைது

0 2696

கேரளாவில் பெண் மருத்துவர் ஷஹானா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலரும் சக மருத்துவருமான ரூவைஸ் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்த ஷஹானாவுக்கு கடந்த 5ஆம் தேதி இரவுப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

அவர் பணிக்கு வராததால் அறைக்குச் சென்று பார்த்தபோது ஷஹானா உடலை மட்டுமே மீட்க முடிந்தது. பின்னர், அங்குக் கிடைத்த கடிதத்தில் படிப்பிற்கும் திருமணத்திற்கும் நிறைய பணம் வேண்டும், யாரையும் நம்பி இருக்க முடியாது, பணம் மட்டும்தான் இங்கே முக்கியம் என்றும் எழுதப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீஸ் விசாரணையில், வரதட்சணையாக 150 சவரன் நகை, 15 ஏக்கர் நிலம், பி.எம்.டபிள்யூ கார் உள்ளிட்டவை வேண்டுமென ரூவைஸ் குடும்பத்தினர் கேட்டது தெரியவந்தது. வரதட்சணை கொடுக்க முடியாமல் திருமணம் நின்று போனதால், விரக்தியில் ஷஹானா தற்கொலை முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments