பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு

0 1302

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு 3 ஆயிரம் பிரமுகர்கள் உள்பட 7 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்ப ராமஜென்ம பூமி அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்பு பூஜைகளை மேற்கொள்கிறார்.

கோயில் திறப்பு விழாவுக்கு, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அமிதாப் பச்சன், ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்ளிட்ட முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

ராமாயணம் தொலைக்காட்சித் தொடரில் ராமர், சீதையாக நடித்த அருண் கோவில், தீபிகா இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. 50 வெளிநாட்டுத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments