வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அன்பரசன் என்பரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள தீயணைப்புத்துறை

0 2321

வெள்ளம் சூழ்ந்திருந்த பழைய மகாபலிபுரம் சாலையில் நடந்து வந்தபோது அடித்துச் செல்லப்பட்ட நபர் 3 நாட்களாகியும் கிடைக்காத நிலையில், அவரது குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

திருப்போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த அன்பரசன் கடந்த 4ஆம் தேதி அன்று படூரில் உள்ள தனியார் குடியிருப்புக்கு தோட்ட வேலைக்கு சென்று பகல் ஒரு மணி அளவில் நண்பர்கள் 2 பேருடன் வீடு திரும்பும்போது அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மற்ற இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் கயிறு மூலம் மீட்ட நிலையில், அன்பரசன் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

3 நாட்களாக மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என அவரது குடும்பத்தினர் கூறும் நிலையில், தற்போது அன்பரசனை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments