மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் மந்தமான செயல்பாடே காரணம் அண்ணாமலை குற்றச்சாட்டு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக அரசின் மந்தமான செயல்பாடே காரணம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த செங்குன்றத்தில் பேசிய அவர், ஆளுங்கட்சி அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் அரசு இன்னும் துரிதமாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டுமென்றும் கூறினார்.
ஆளுங்கட்சி அரசின் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவுன்சிலர்களும் கீழே இறங்கி வந்து மக்களை நேரில் சந்திக்க வில்லை என்பது தான் மக்களின் கோபமும் சென்னை முழுவதும் ஏற்படும் ஆர்ப்பாட்டத்திற்கும் காரணம் எனவும் தெரிவித்தார்.
முகாமில் தங்க வைத்திருக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளனவா என மக்கள் பிரதிநிதிகள் நேரில் சென்று பார்வையிட வேண்டும் என கேட்டுக் கொண்ட அண்ணாமலை, கழிப்பறை வசதிகள், தங்கும் விடுதிகள் சரியான முறையில் உள்ள தான் என உறுதி செய்யவும் தமிழக அரசு தவறிவிட்டது என குற்றஞ்சாட்டினார்.
Comments