கொலம்பியாவின் அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கங்கள் குண்டு வைத்து அழிப்பு
கொலம்பியாவின் அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச் செயல்பட்ட தங்கச் சுரங்கங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
அமேசான் மழைக்காடுகளில் செயல்பட்டு வந்த 19 தங்கச் சுரங்கங்கள் மூலம் மாதந்தோறும் 1.5 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கம் உற்பத்தி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தங்கத்தைச் சுத்திகரிக்க பாதரசம் மூலம் ஆறுகளில் கழுவுவதால் ஆறுகள் மாசடைவதாக எழுந்த குற்றச்சாட்டினைத் தொடர்ந்து கொலம்பிய ஆயுதப்படையினர் வனப்பகுதிகளில் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து பிரேசிலுடன் நடந்த கூட்டு முயற்சியில் 19 சுரங்கங்களையும் குண்டு வைத்து தகர்த்ததாக கொலம்பிய அரசு தெரிவித்துள்ளது.
Comments