தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உள்பட மேலும் 5 அமைச்சர்களும் பதவியேற்பு
தெலுங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி இன்று பிற்பகல் 1 மணிக்கு ஹைதராபாதில் உள்ள லால்பகதூர் விளையாட்டரங்கில் பதவியேற்க உள்ளார்.
ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். மல்லு பட்டி விக்ரமர்க்கா என்பவர் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
மேலும் 4 அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா, ராகுல், பிரியங்கா, கார்கே உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி சென்று தமது எம்பி பதவியை ராஜினாமா செய்து நேற்றிரவு ரேவந்த் ரெட்டி ஹைதராபாத் திரும்பினார்.
டெல்லியில் அவர் சோனியா காந்தி , ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நேரில் அழைப்பு விடுத்தார்.
Comments