பிரதமர் மோடி தலைமையில் இன்று பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்... மூன்று மாநில முதலமைச்சர்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு?

0 1478

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சட்டிஸ்கர் மாநிலங்களின் புதிய முதலமைச்சர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு இன்று கூடுகிறது.

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாலயோகி அரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் பாஜக எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். இக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே டெல்லி விரைந்தார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் அமித் ஷாவை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேற்றிரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

3 மாநில முதலமைச்சர்களாக யாரைத் தேர்வு செய்வது என்பது குறித்து நட்டா, அமித்ஷா ஆகியோருடன் பிரதமர் மோடியும் ஏற்கனவே ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments