ஜூம் இணைய விசாரணையில் ஆபாசப்படம்... கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்

0 3641
ஜூம் இணைய விசாரணையில் ஆபாசப்படம்... கர்நாடக உயர்நீதிமன்றம் ஆன்லைன் விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்..!

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடந்துக் கொண்டிருந்த போது சில விஷமிகள் ஆபாசப்பட வீடியோவை ஓடவிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டு உடனடியாக விசாரணை நிறுத்தப்பட்டது.

இதனால் ஆன்லைன் மூலமான விசாரணையை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஜூம் இணையவழி விசாரணையில் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்த விஷமிகள் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். ஆன்லைன் விசாரணையில் புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்களை புகுத்தும்வரை நேரடி விசாரணை மட்டுமே நடைபெறும் எனவும் கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments