அரசோடு கரம் கோர்த்து சகமனிதர் துயர்துடைக்க தொண்டுள்ளம் படைத்த எல்லாரும் ஓரணியில் திரள வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 4848

அரசோடு கரம் கோர்த்து சகமனிதர் துயர்துடைக்க தொண்டுள்ளம் படைத்த எல்லாரும் ஓரணியில் திரள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

2015-ம் ஆண்டு பெருவெள்ளத்தை விட, மிக்ஜாம் புயல் இடைவிடாத பெருமழையாக எங்கும் கொட்டித் தீர்த்திருப்பதாகவும், முறையான முன்னேற்பாடுகள் விரிவான கட்டமைப்புகளால் உயிர்ச்சேதம் குறைந்துள்ளதாகவும் தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு, நிவாரணப் பணிகள் போர்க்கால வேகத்தில் நடந்துகொண்டிருப்பதாகவும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து, இயற்கை பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களைவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments