இம்ரான்கானின் கட்சியின் புதிய தலைவராக கோஹர் அலி கான் நியமனம்.. தேர்தல் ஆணையம் கெடு விதித்ததால் நடவடிக்கை..!!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் கட்சியின் புதிய தலைவராக கோஹர் அலி கான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள இம்ரான்கான் சிறையில் உள்ள நிலையில், அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாஃப் கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டையைத் தக்கவைக்க 20 நாட்கள் அவகாசத்தை அந்நாட்டு தேர்தல் ஆணையம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் வடமேற்கு நகரமான பெஷாவரில் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் வழக்கறிஞரான கோஹர் அலி கானுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Comments