நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர்.. 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்..!!
நாடாளுமன்றத்தின் குளிர்காலக்கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. வரும் 22ம் தேதி வரை 15 அமர்வுகளாக இக்கூட்டத் தொடர் நடைபெறும்.
கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தவும் 21 மசோதாக்களை நிறைவேற்றவும் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
இதற்காக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட 23 கட்சிகளைச் சேர்ந்த 30 பேர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரகலாத் ஜோஷி, பல்கலைக்கழக மசோதா உள்பட 21 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்கு மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின் விதிகளை நீட்டிப்பதற்கான இரண்டு சட்டங்கள், குற்றவியல் சட்டங்களை மாற்றுவதற்கான மூன்று மசோதாக்கள் உட்பட 21 மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும் பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.
Comments