வீராட் கோலி ஓட்டலுக்கு அரையும் குறையுமாக போனத்தான் அனுமதியாம்..! வேட்டி கட்டிய இளைஞருக்கு தர்ம சங்கடம்

0 5851

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் ஹோலிக்கு சொந்தமான ஓட்டலுக்கு தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து சாப்பிடச் சென்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வருத்தத்துடன் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார்.

மும்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் வீராட் ஹோலிக்கு சொந்தமாக ஒன் எயிட் என்ற ஓட்டல் உள்ளது.

இந்த ஓட்டலுக்கு தனிப்பத்திரிகையாளர் ஹரிச்சரன் என்பவர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்து சாப்பிடச் சென்றுள்ளார்.

அவர் வேட்டி அணிந்து வந்திருப்பதை சுட்டிக்காட்டி ஓட்டல் நிர்வாகம் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் மிகுந்த வருத்தத்துடன் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி உடுத்தி வந்த தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது விராட் ஹோலியின் கவனத்துக்கு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே வீடியோ வெளியிடுவதாகவும் அவர் கூறி உள்ளார்

ஹரிச்சரன் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அந்த ஓட்டலுக்குள் இருந்து டிரவுசர்ஸ் அணிந்த பெண் ஒருவர் வெளியே வந்தார்.

ஒருவேளை ஹரிச்சரன் போல உடலை முழுமையாக மறைத்து வேட்டி சட்டை அணியாமல் அந்தபெண் போல மாடர்னாக ஆடை அணிந்திருந்தால் தான் இந்த ஓட்டலுக்குள் அனுமதிப்பார்கள் போல என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments