லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்

0 5211
லண்டனில் காணாமல் போன இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு - போலீஸ் விசாரணையில் கிடைத்த முக்கிய தகவல்

மேற்படிப்புக்காக பிரிட்டன் சென்ற இந்திய மாணவர் மித்குமார் படேல், லண்டனில் நடைப் பயிற்சிக்கு சென்றபோது தேம்ஸ் நதியில் தவறி விழுந்து மூழ்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டன் சென்ற அவர், தமது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அவருக்கு இடம் கிடைத்ததை அடுத்து கடந்த மாதம் 20 ஆம் தேதியன்று கல்வி நிலையம் செல்ல திட்டமிட்டிருந்தார்.

ஆனால், 17ஆம் தேதியன்று நடைப்பயிற்சி சென்ற மித்குமார் படேல், வீடு திரும்பாததால் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தேம்ஸ் நதியில் ஒதுங்கிய அவரது உடலை 21ஆம் தேதி போலீசார் கைப்பற்றினர். உடலை இந்தியாவுக்கு அனுப்ப அவரது உறவினர் இணையதளம் மூலம் நிதி திரட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments