ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை

0 3808
ஒரு நபர் மீது தவறு இருப்பதால் மொத்தத் துறையும் தவறானது அல்ல: தமிழிசை

அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூலம் சோதனை நடத்தி, தமிழக அரசு ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அசாம் உதய தினக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளரிடம் பேசிய ஆளுநர் தமிழிசை, ஒரு அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எடுக்கப்பட்டதால் அனைத்து அமைச்சர்கள் வீட்டிலுமா சோதனை நடைபெற்றது என கேள்வி எழுப்பினார்.

ஒரு நபர் மீது தவறு இருப்பதால், மொத்தத்துறையின் மீதும் தவறு இருப்பதாக குறை கூறக்கூடாது எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments