சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்று இந்திய அணி சாதனை

0 2323

சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராய்பூரில் நேற்று நடைபெற்ற நான்காவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இந்தியா இதுவரை விளையாடிள்ள 213 போட்டிகளில் 136-ஆவது வெற்றியைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

பாகிஸ்தான் அணி 226 போட்டிகளில் 135 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகள் உள்ளன.

நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இத்துடன், சொந்த மண்ணில் தொடர்ந்து 5 இருபது ஓவர் தொடர்களை இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments