மாமல்லபுரம் ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் தலைமையிலான குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

0 1171

ஜப்பான் நாட்டு ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தலைமையிலான குழுவினர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு வருகை தந்து புராதன சிற்பங்களை கண்டு ரசித்தனர்.

கடற்கரை கோயில் வளாகத்தில் சுற்றுலாத்துறை சார்பில் அவர்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு கரகாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது கரகாட்ட இசைக்கலைஞர்கள் மேளம் அடித்து கரகாட்டம், மயிலாட்டம் ஆடிய போது அந்த இசையினை ரசித்த ஹிரோஷிமா மாகாண சபாநாயகர் நகமோட்டோ டகாஷி தானும் ஆடி மகிழ்ந்தார்.

உடன் வந்த நகாரா கோஜி என்ற நாடாளுமன்ற உறுப்பினர் தன்தலையில் கரகம் வைத்து ஆடினார்.

ஜப்பான் பிரதிநிதிகள் மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகத்திற்கு நடந்து சென்று கடற்கரை கோயில் சிற்பங்களை பார்த்து ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments