தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய புயலுக்கு மிக்ஜௌம் என பெயர் சூட்டல்
தென்கிழக்கு வங்கக்கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக நாளை உருவாகும் என இந்திய வானிலை மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், இந்த புயலுக்கு மியான்மர் நாடு முன்மொழிந்த மிக்ஜௌம் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மிக்ஜௌம் புயல் கரைக்கு நெருக்கமாக பயணித்தாலும் வலு குறையாமல் மச்சிலிப்பட்டிணம் - நெல்லூர் இடையே 5-ஆம் தேதி கரையை கடக்கும் என்றும், அப்போது அதிகபட்சமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால், தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
Comments