வீதி...வீடெல்லாம் தண்ணீர்.. கருணையை எதிர்பார்க்கும் மடிப்பாக்கம் காமாட்சி நகர்..! சென்னை மாநகராட்சி கவனத்திற்கு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மடிப்பாக்கம் காமாட்சி நகரில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை விரைந்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி 188-வது வார்டு மடிப்பாக்கம் காமாட்சி நகர், பெரியார்நகர் விரிவு பகுதியில் குடியிருப்புகளில் புகுந்த மழைநீரால் இரவில் உறங்க கூட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், வீடுகளுக்குள் முழங்கால் அளவிற்கு மழைநீர் புகுந்ததால் வீட்டில் வசிக்க முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.
முக்கிய பிரதான சாலைகளை மட்டும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பார்வையிட்டு செல்வதாகவும் தெருக்களில் உள்ளே எங்களைப் போன்று மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை இதுவரை யாரும் சந்திக்கவில்லை என்று பெண்கள் ஆதங்கப்பட்டனர்
வீட்டுக்குள் புகுந்துள்ள இந்த மழைநீரை அகற்றுவதற்கான வழி தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக திகைத்து நிற்பதாகவும், அடுத்துவரவிருக்கும் மழையை நினைத்து அச்சத்தில் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்
சென்னை மாநகராட்சி மற்ற பகுதிகளில் மழை நீரை விரைந்து அகற்றியது போல தங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரையும் அகற்றித்தரவேண்டும் என்பதே அங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Comments