காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பினர்

0 1131

காசாவில் இருந்து விடுவிக்கப்பட்ட தாய்லாந்தின் முதல் பிணய கைதிகள் குழு சொந்த ஊர் திரும்பியது.

தாய்லாந்து விமான நிலையம் வந்திறங்கியவர்கள் இஸ்ரேல்-தாய்லாந்து கொடிகள் பதித்த சட்டைகளை அணிந்து இருந்தனர். தாயகம் திரும்பிய அவர்கள் கடந்த அக்டோபர் 7 தாக்குதலில் பலியான சக தொழிலாளர்களின் மறைவுக்கு ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.

அன்றைய தினம் 39 தாய்லாந்து நாட்டினரை கொன்றதுடன் 32 தொழிலாளர்களைக் ஹமாஸ் கடத்திச் சென்றதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காசாவில் விடுவிக்கப்பட்ட மொத்தம் 23 பேரில்  17 பேர் கொண்ட முதல் குழு வியாழன் அன்று திரும்பியது, ஒன்பது பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.போருக்கு முன்பு, சுமார் 30,000 தாய்லாந்து தொழிலாளர்கள் விவசாயத் துறையில் பணிபுரிந்தனர். 

இது இஸ்ரேலின் மிகப்பெரிய புலம்பெயர்ந்த தொழிலாளர் குழுக்களில் ஒன்றாக இருந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments