காசாவில் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என கத்தார் மற்றும் எகிப்து வலியுறுத்தல்
காசாவில் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் மத்தியஸ்தர்களான எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
போர் நிறுத்தம் முடிவடையும் நிலையில், காசாவில் வசிப்பவர்கள் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே மேற்கு ஜெருசலேம் பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், 16 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட இரண்டு பேர் தங்களது அமைப்பினர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் நீட்டிக்கப்பாட்டால்தான் காசாவின் மக்கள் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும் என உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி உள்ளது.
Comments