துபாயில் சர்வதேச பருவநிலை உச்சி மாநாட்டில் இன்று பிரதமர் மோடியின் உரை... விமானநிலையத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
துபாயில் இன்று நடைபெறும் பருவநிலை உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ,பசுமை நிதி இயக்கம் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் குறித்துஇந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில் இந்தியாவின் பங்களிப்பை பிரதமர் மோடி விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு விமானம் மூலமாக துபாய் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமர் ஷேக் சைப் பின் ஜாயத் மற்றும் வெளியுறவுத் துறை அதிகாரிகள் வரவேற்றனர். இந்திய வம்சாவளியினரும் பிரதமரை வரவேற்றனர்.
உணவு விடுதியிலும் மோடி மோடி என்ற உற்சாக முழக்கத்துடன் பிரதமருக்கு இந்திய வம்சாவளியினரால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு கலாச்சார நடனமும் அரங்கேற்றப்பட்டது.
மாநாட்டுக்கு இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.
Comments