பேனர் வச்சவன்.. செய்வினை வச்சுட்டான்.. மல்லாக்க விழுந்து மண்டை போச்சு சார் ..! மப்பு ஆசாமியின் அதார்..உதார்.. சம்பவம்
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் அரசு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த போதை ஆசாமி ஒருவர் நிற்க இயலாமல் மல்லாக்க விழுந்ததால் பின்னந்தலையில் அடிபட்டு மயங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சிகிச்சைக்கு பின் மருத்துவரை தாக்கி வம்பு செய்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
வகங்கையில் யாராவது சாலையில் படுத்து கிடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை... காரணம் அவர் மது அருந்திவிட்டு ஓய்வெடுப்பதாக நினைத்து தொந்தரவு செய்யாமல் கடந்து சென்றுவிடுவார்கள். அந்த அளவுக்கு போதையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது
அந்தவகையில் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரி வாசலில் பின்னந்தலையில் காயத்துடன் ஒருவர் உளரிக்கொண்டு உயிருக்கு போராடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
விசாரணையில் அவர் பில்லூரை சேர்ந்த பாக்கியராஜ் என்பதும் அவரை யாராவது தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் கல்லூரி வாசலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, போதை தலைக்கேறியதால் , அவர் வாண்டடாக சென்று பேணரை கிழித்து பின் மண்டையை பிளந்து கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது
கல்லூரி வாசலில் சபாநாயகர் அப்பாவு படத்துடன் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கருத்தரங்கு நிகழ்ச்சிக்காக, பேனர் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்து காண்டான பாக்கியராஜ் மது போதையில் கல்லை தூக்கி எரிந்து பிளக்ஸ் பேனரை கிழித்தார்.
பின்னர் மேலும் போதை ஏற்றிக் கொண்டு, கிழிந்து தொங்கிய பேனரை முழுவதும் இழுத்து கிழித்த போது மல்லாக்க விழுந்ததில் அவரது பின் மண்டையில் அடிபட்டு சுயநினைவிழந்ததாக கூறப்படுகின்றது
108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அவரை சிகிச்சைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு மயக்கம் தெளிந்த பாக்கியராஜ், சிகிச்சை அளித்த மருத்துவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை படம் பிடித்த செய்தியாளரை நோக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன் அடிக்கவும் பாந்தார் பாக்கியராஜ், தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தின் போது மருத்துவமனையில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருந்ததால் போதை ஆசாமியை சமாளிக்க முடியவில்லை
பொதுமக்கள் களத்தில் இறங்கி போதை ஆசாமியை கட்டுப்படுத்தினர். இது போன்ற கோபக்கார குடிகார ஆசாமிகளை சமாளிக்க மருத்துவமனையில் கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு
Comments