கன மழை பெய்தாலும் தடையின்றி மின் விநியோகம்... மின் தடை பற்றி புகார் செய்ய 94987 94987 - அமைச்சர் தங்கம் தென்னரசு

0 1780

சென்னையில் கடந்த 8 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு புதனன்று மிக கனமழை பெய்த போதிலும், 240 துணை மின் நிலையங்களில் உள்ள 1,877 மின்பாதைகள் மூலம் தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னையில் சென்ற ஆண்டு மழையின் போது நீர் தேற்கிய பகுதிகளளில் கண்டறியப்பட்ட 4658 பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டதால் பாதுகாப்பான தடையற்ற சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாக வலைப்பதிவில் அவர் கூறியுள்ளார்.

பருவ மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு முழுவதும் 3,00,887 மின்கம்பங்கள், 14,187 கி.மீ மின் கம்பிகள், 19,759 மின்மாற்றிகள் மற்றும் மின் தளவாடப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்,  மின்தடை ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய 15,300 களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments